புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். புரட்டாசி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்
புரட்டாசி மாதம் |
புரட்டாசி மாதம்:- இந்த மாதத்தில் மீன்விலை சரியும். இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்., மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். எனவே புரட்டாசி மாதத்தில் மட்டும் இறைச்சி விற்பனை டல் அடிக்கும். அதனால் மட்டன்,சிக்கன்,மீன் விலைகள் குறைவாக இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்
புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரிய னைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன். புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. அதுவும் துரித மாய்க் கற்றுணரக்கூடியவர்கள். சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள். புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களா கையால் தர்க்கம் பேசுவதிலும் சமர்த்தர். குதர்க்கம் செய்வதிலும் வித்தகர். அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர். கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தர். படிக்காத மேதைகளும், படித்த பட்டதா ரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.
ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர். மற்றவர்கள் செய் யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர். மற்றவர்களுடைய முன்னேற்றத் திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந் தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரி யத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.
இயற்கையை ரசிப்பவர். சுவையான பண்டங் களைப் புசிப்பவர். நல்ல பேச்சாளர். கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடு வதிலும் தொடர் கதைகளையும்,
சிறு கதைக ளையும் எழுதுவ திலும் நிகரற்று விளங்குவர். இவருக் கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள் கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.
சுறுசுறுப்பானவர்கள். ஆனால், சுகஜீவிகள், நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற் குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வர். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.
பெருமாள் |
புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால்
புரட்டாசி மாத்தில் பிறந்த குழந்தைகள் ஞான யோகியாக இருப்பார்கள்.
புரட்டாசி சனி
"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.
புரட்டாசியில்
புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் அது வளரும்). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.
தடைகளை தகர்க்கும் புரட்டாசி சனி
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15 ஆகிய நாட்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!
புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் . திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
புரட்டாசி மாத சிறப்புகள்
அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான்
இந்த மாத்தில்தான் செனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.
புரட்டாசி சனி (Puraddasi Sani)
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்
‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.
புரட்டாசி மாத விரத வழிபாடு
ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக் டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5, 13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.
தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.
மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!
நடிகை பூஜா மிஸ்ராவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வரக் காரணம் என்ன?
முதலில் மீடியாக்களில் வந்த செய்தியை பார்க்கலாம் அப்புறம் அவருக்கான ஜாதக பலனைப் பார்க்கலாம்.
பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ரா. அவர் நடிப்பை பற்றிய செய்திகளை விட அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பூஜா.
டெல்லி - தாஜ் தஜவாராகா ஜோட்டலில் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்தாராம். அவர் தங்கிய அறையில் இருந்த உடைந்த பொருட்களுக்கு பணம் தர மறுத்தாராம். அதன் பொருட்டு ஹோட்டல் ஊழியரை தாக்கினாராம். இதுகுறித்து வீடியோ வெளியிட்டார்களாம் மீடியாக்கள். நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு இருக்கும்பொழுது மீடியாக்கள் வெளியிட்டது தவறு . அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டினாராம். இந்த வழக்கினால் மீடியாக்கள் ரூ1000 கோடி தர நேரிடும் என்றும் சொன்னாராம்!
முன்பு ஒரு முறை படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங்கும், அவரது சகோதரரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா புகார் அளித்தார்.
அதற்கு பின்பு தன்னுடையவளர்ச்சியில் பொறாமை கொண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா எனக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் பூஜா மிஸ்ரா என்பது அனைவரும் அறிந்ததே.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால் சச்சரவு குறித்து இங்கு முழுமையாக விளக்கம் அளிக்க முடியாது! எனவே இங்கு சுருக்கமாகவே சொல்கிறேன்.
1. அவருக்கு ஏற்கனவே கால சர்ப்ப தோஷம் இருக்கிறது. அனைத்து கிரஹங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் சிக்கி விட்டன. ஜாதகம் பார்க்கவும்.
2. லக்னத்திற்கு செவ்வாயன் , ராகு, சனி சம்பந்தம் இருக்கின்றன. அறிவுஸ்தானத்துக்கு காரணமான புதன்னும் ராகுகேதுவின் பிடியில்தான் இருக்கிறது. இதனால் அவருக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. செவ்வாயே லக்னத்தை பார்க்கிற காரணத்தினால் இவர் இயற்கையிலேயே கோபம் உடையவர். அந்த செவ்வாயின் வீட்டிலே சனியும் உள்ளது. சனியின் வீட்டிலே செவ்வாய் உள்ளது. இரண்டும் பரிவர்த்தனையாகி உள்ளது. இந்த சனியே அவருக்கான உதவியாளரை அல்லது வேலை செய்வோரைக் குறிக்கும். அந்த செவ்வாய் 7, 12க்கும் அதிபதியான காரணத்தினால் தனது நண்பர்களினாலும் வேலைக்காரர்களாலும் துக்கத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாவார் இதனால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவதும் இயலபானதே. நீதிக்கும் நேர்மைக்கும் உரியவரான குருவோ அவமான ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்து இருப்பதோடு அல்லாமல் சண்டை சச்சரவுக்கு காரணமான 12மிடத்தையும் பார்கிறது. அது மட்டுமல்லாமல் வாக்கு வாத்துக்கு காரணமான 2மிடத்தையும் நோக்குகிறது. வாக்கு வாத்திலும் வழக்கிலும் போராடுவதிலுமான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் நீதிமன்ற வழக்கிலும் ஈடுபடுடக்கூடிய சூழ்நிலையை உருவாகியது.
மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!
pooja missra
ஓட்டல் ஊழியரை அடித்து உதைத்து மொபைலை உடைத்த நடிகை பூஜா மிஸ்ரா- தின தந்தி செய்தி
பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு! மும்பை-மாடல்-நடிகை- மிஸ்ரா-மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!
ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் உள்ள நிலவரங்கள்
1. குரு , செவ்வாய், சூரியன், சனி,சுக்ரன் என 5 கிரகங்கள் உச்ச நிலை.
2. குரு மங்கள யோகம் குருவும் செவ்வாயயும் 1,7 என இருப்பதால்
3. சந்திர மங்கள யோகம் சந்திரனும் செவ்வாய்யும் 1,7 என இருப்பதால் .
4. குரு சந்திர யோகம் குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பதால்
இப்படி யெல்லாம் இருந்ததால் அவருக்கு மன உறுதி அதிகம் இருந்தது. அஞ்சா நெஞ்சம் இருந்தது. யாருக்கும் பயப்படாத தைரியமாக முடிவு எடுக்கும் மன துணிச்சல் இருந்தது. பகைவரை வெல்லும் உறுதி வைராக்கியம் இருந்தது. பிடிவாதம் இருந்தது.
5. 6ல் ராகு எதிரிகளை வெல்லும் ஆற்றல்.
6. 12ல் கேது சயன தோஷம் இருப்பதாலும் 7க்கு 12ம் அதிபனாகிய குரு பார்வை பெற்றதாலும் மனைவியை பிரிய நேர்ந்தது.
7. சனி பார்வை சூரியனுக்கு விழுவதாலும் 12க்குரிய புதனே சூரியனுடன் சேர்ந்ததாலும் தந்தையை பிரியும் நிலையை தந்தது
8. சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது நுண் கலைகளில் நுண் படிப்புகளில் வித்தகத்தை தரும் புதஆதித்தியா யோகமாகும்.
9. 8க்குரிய ஆயுள்காரகன் சனி லக்னத்தை பார்வை செய்வதாலும் அறிவுக்காரனாகிய புதனையும் மூளைக்காரனாகிய சூரியனையும் மனசுக்காரனாகிய சந்திரனையும் அந்த சனியே பார்கிற காரணத்தினாலும் தற்கொலை உணர்வை ஸ்ரீராமபிரானுக்கு தூண்டிவிட்டது.
9க்குரிய குருவும் 10க்குரிய செவ்வாயும் நேருக்கு நேராக இருந்து தர்மகர்மாதிபதி யோகம் தருகிறது.
நம்மைப் போல சிரித்தவர் அவர்
நமமைப் போல அழுதவர் அவர்
இழப்புகள் பல கண்டவரவர்-அதில்
மீண்டெழுந்து வந்தவரவர்
உறவுகள் பிரியும் சோகமறிந்தவர்
செல்வத்தில் உயர்ந்து தாழ்ந்தவரவர்
இரண்டிலும் செம்மையாய் வாழ்ந்தவரவர்.
விதியென்னும் புயலிலே வீழ்ந்தவர் அவர்
நம்மைப்போல் துயர்பல கண்டவ ரவர்...
ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் பல கிடைத்திடும்.
எந்தை ராம ஜாதகத்தில்
மேஷம் நின்ற சூரியனே புதனே
கடகம் நின்ற சந்திரனே குருவே
மகரம் நின்ற மங்களனே
மீனமதில் மகிழ்ந்திருந்த சுக்கிரனே
தனுஷ் மிதுனம் தமிலூர்ந்த பாம்புகளே
எளியவன் வணங்குகிறேன்
ஏற்றிடுவீர் தயையுடனே...
ஸ்ரீ ராம ஜெயம்!
"ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !
ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !! "
ஹனுமான் ஜாதகம் - ஹனுமார் ஜாதகம்
காக்கை ஜோதிடம்! காக்கா சொல்லும் மழை ஜோதிடம்!
ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..
27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
நாடி சோதிடம்
தெரிந்த ஜோதிடம் - தெரியாத உண்மைகள்
பெருமாளின் கருணை! - கண்பார்வையற்றவர்க்கு இரண்டு கண்களும் தெரிந்த அதிசயம்!
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் ஆகியவைகளைப் பற்றி அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
பிரச்சனை இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை!
கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?
கோவிலுக்கு செல்வதால் ஏற்படக்கூடிய பயன்கள்
தீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன?
என்ன பயன்? என்ன பயன்? இளநீரால் என்ன பயன்?
பயன் தரும் பனை மரங்கள்
பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்-கார்திக் ஜோதிடம்!
ஜோதிடம்-JOTHIDAM: கட்டண ஜோதிடம் ...
LIST OF USEFUL BLOGS
இலவச சாப்ட்வேர்,Free software,free download,இலவச டவுணலோடுLIST OF USEFUL BLOGS போன்றவைகளை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
கட்டுரை,பேட்டி,ஜோதிடம்,ஜாதகம்,ஆராய்ச்சி தொகுப்புகள் நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது?-சிவ அய்யாதுரை
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி மாத பூஜைக்காக ...
புரட்டாசி மாதம் என்ன சிறப்பு? - தி ...
புரட்டாசிக்கு தனி மகிமை
புரட்டாசி மாதம் அசைவம் ...
புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை ...
சனி தோஷம் போக்கும் புரட்டாசி ...
புரட்டாசி சனிக்கிழமையின் ...
புரட்டாசி பௌர்ணமி
புரட்டாசி மாத வழிபாடு முறைகள்
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?
புனிதமான புரட்டாசி -
தோஷங்கள் நீக்கும் புரட்டாசி வழிபாடு!
னகபனகபனக
Best slots machines with great payouts - Casino Review
பதிலளிநீக்குThe best slot machine games in 2021 ✓ 텐벳 먹튀 The biggest payout percentages ✓ The 피망 슬롯 머신 best games 벳365우회주소 in the industry m2 슬롯 ✓ Best 파워 볼 검증 사이트 bonus codes ✓ Play live dealer games.