ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

திருமணப் பொருத்தம் இலவசம்! தினகரன்ல! ஆன்லைன்ல

இலவசமா திருமண பொருத்தம் பார்க்கணுமா? இலவசமா புத்தகம் வேணுமா? அப்போ இந்த வெப்சைடு போங்க!...
 திருமணப் பொருத்தம் பார்கணுமா ஆன்லைனில் பார்கலாம்
தினகரன் வெப்சைடுல பாருங்க சூப்பரா தெரியும்
http://astrology.dinakaran.com/thiruporutham.asp

ஆனா பிரிண்ட் எடுத்தா நிறைய இங்கு செலவாகும். அதனால
இன்னொரு வெப்சைடு இருக்கு அங்கு பிரிண்ட் எடுக்கலாம் அந்த வெப்சைடு
http://www.yourastrology.co.in/services/marriage-match-by-rasi/

உங்களுக்கு புத்தகம் வேண்டுமா அதுவும் திருமணப்பொருத்தம் பார்க்கும் புத்தகம் வேண்டுமா அது கீழ இருக்குற வெப்சைடுக்கு போங்க அங்க அது கிடைக்குது

http://www.eegarai.net/t47988p20-topic


திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,

1.தினப் பொருத்தம்
ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

2.கணப் பொருத்தம்
கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்

3.மகேந்திரப் பொருத்தம் 

திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.


4.ஸ்திரீ தீர்க்கம்

திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

5.யோனிப் பொருத்தம் 

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

6.ராசிப் பொருத்தம்
கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.

7.ராசி அதிபதி பொருத்தம்
கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.

8.வசியப் பொருத்தம்
கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.

9.ரஜ்ஜுப் பொருத்தம்
தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

10.வேதைப் பொருத்தம்
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு. இவை இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

இதோ உங்களுக்காக திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்னூல்:

இணையத்தில் காணக் கிடைக்கும் இந்த 30 பக்க மென் நூலில் திருமண பொருத்தம் ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க உதவும் இந்த மென்னூல்


தரவிறக்க சுட்டி http://www.ziddu.com/download/12723955/THIRUMANAPORUTHAM.pdf.html

திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் (Software):

உங்களுக்கு இணைய இணைப்பு எப்போதும் இருப்பதில்லை என்று வருத்தமா? கவலை விடுங்கள். இணையவெளியில் கிடைக்கும் இந்த மென்பொருள் கொண்டு நீங்கள் 10 பொருத்தமும் ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாது, ஒரு ஆண்/ பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண்/ ஆண் நட்சத்திரங்களும், பொருத்தங்களும் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் Print செய்து கொள்ள முடியும் என்பது மற்றுமோர் தனிச் சிறப்பு. இந்த மென்பொருள் இங்கே கிடைக்கிறது.

தரவிறக்க சுட்டி  http://www.4shared.com/file/1IQ8YPSy/astrology.html



1 கருத்து:

  1. Blackjack casino and sportsbook - DrmCD
    Blackjack online with a blackjack game and a 거제 출장안마 casino welcome offer. No 아산 출장샵 deposit bonus, free spins, free casino bonuses & other promo codes 양주 출장샵 for players 아산 출장샵 in 원주 출장안마 this

    பதிலளிநீக்கு